Published : 10 Jul 2024 06:04 AM
Last Updated : 10 Jul 2024 06:04 AM

பேருந்து - ரயில் ஒருங்கிணைந்த பயணச்சீட்டு: செயலியை உருவாக்க தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம்

சென்னை: சென்னையில் அரசு பேருந்துகள்,புறநகர் மின்சார ரயில்கள், மெட்ரோரயில்களில் லட்சக்கணக்கான வர்கள் தினசரி பயணிக்கின்றனர். ஆனால், தனித்தனியான முறைகளில் இவற்றுக்கான பயணச்சீட்டுகளை பெற வேண்டியுள்ளது.

இந்நிலையில், பொதுமக்களின் சிரமங்களை குறைக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பு (கும்டா) தனது முக்கியமான முயற்சியாக, சென்னை பெருநகர போக்குவரத்துக்கழக பேருந்துகள், சென்னை மெட்ரோ ரயில், தெற்கு ரயில்வே புறநகர் ரயில் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பயணச்சீட்டு மற்றும் பயணத்திட்டமிடல் செயலியை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த ஒருங்கிணைந்த செயலியை உருவாக்கும் வகையில், கும்டா அமைப்பு ஒப்பந்தம் கோரியிருந்தது. பல்வேறு நிறுவனங்கள், பங்கேற்ற நிலையில், ஒரு நிறுவனத்தை தேர்வு செய்து, செயலி தயாரிப்பதற்கான பணி ஆணையை கும்டா அமைப்பு வழங்கியுள்ளது.

இந்நிலையில், ஒருங்கிணைந்த பயணச்சீட்டு முறையில் டாக்சி மற்றும் ஷேர் ஆட்டோக்களையும் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான வழிமுறைகளை உருவாக்கி ‘க்யூ ஆர்’ கோடு அல்லது ஒருமுறை கடவுச்சொல் மூலம் பயணிகள், வாடகைக்கார் மற்றும் ஷேர் ஆட்டோக்களுக்கு பணம் செலுத்த முடியும் என்று கும்டா அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x