

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிபார் கவுன்சில் தலைவரான வழக்கறிஞர் பி.எஸ்.அமல்ராஜ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையில் டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையான வழக்கறிஞர்கள் பாசில் மற்றும் வில்லியம்ஸ் ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுகிறது.
அதேபோல, கடந்த மாதம் ரவுடி சீர்காழி சத்யா என்பவரை போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்திகைது செய்தனர். அந்த வழக்கில், சென்னை பல்லாவரத் தைச் சேர்ந்த வழக்கறிஞர் டி.அலெக்ஸ் சுதாகர் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல நெல்லை மாவட்டவழக்கறிஞர்கள் சங்கத் தலைவரை மிரட்டியதாக பாளையங்கோட்டை வழக்கறிஞர் ஆர்.ஜிம் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூரை சேர்ந்த வழக்கறிஞர் கே.சரவணன் என்பவர் திருவேற்காடு போலீஸாரால் போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மயிலாப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சேதுபதி பாண்டியன், கொலை வழக்கு ஒன்றில்கைது செய்யப்பட்டுள்ளார். இந்த 4 வழக்கறிஞர்களும், வழக்கறிஞர்களாக தொழில் புரிய தடை விதிக்கப்படுகிறது என அதில் தெரிவித்துள்ளார்.