வேளச்சேரி உள்ளிட்ட 3 இடங்களில் 13, 14 தேதிகளில் பழைய பொருட்கள் சேகரிப்பு முகாம்: மின்னணு கழிவுகளும் பெறப்படுகிறது

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: கஸ்தூரிபா நகர் குடியிருப்போர் நலசங்கம் சார்பில் வரும் ஜூலை 13, 14 தேதிகளில் அடையார், திருவான்மியூர், வேளச்சேரி ஆகிய இடங்களில் பழைய பொருட்கள் சேகரிப்பு முகாம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக அச்சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொதுமக்கள் பலர் தங்கள் வீடுகளில் தேவையற்ற பழையபொருட்களை என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டிலேயே வைத்திருக்கின்றனர். இவர்களுக்கு தேவையற்ற பொருள், மற்றவர்களுக்கு பயனுள்ள பொருளாக உள்ளன.

அதனால் பழைய பொருட்களை, தேவையானவர்களிடம் பெற்று, அவை குப்பைக்கு செல்வதைதடுக்கும் நோக்கில் வரும் ஜூலை 13,14 தேதிகளில் பழைய பொருட்கள் சேகரிப்பு முகாம் 3 இடங்களில் நடைபெற உள்ளது.

அடையாரில், கஸ்தூரிபா நகர் சமூகநலக் கூடத்தில் 13-ம் தேதி காலை 9 முதல் மாலை 6 மணி வரை, 14-ம் தேதி காலை 9 முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.

திருவான்மியூரில் மருந்தீஸ்வரர் நகர் யூத் ஜிம்மிலும், வேளச்சேரியில் விஜிபி சீதாபதி நகர், உஷா சாலையிலும் 13 -ம் தேதி காலை 9 முதல்மாலை 4 மணி வரையும், 14-ம் தேதி காலை 9 முதல் பிற்பகல் 1.30 மணி வரையும் நடைபெறும்.

புத்தகங்கள், காகிதங்கள்: மின்னணு கழிவுகள், சுத்தமான கிழிந்த துணிகள், காலணிகள், புத்தகங்கள், காகிதங்கள், காலி மாத்திரை உறைகள், பால்பாயிண்ட் பேனாக்கள், பொம்மைகள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்கலாம். மேலும் விவரங்களுக்கு 8667499135என்ற எண்ணை தொடர்புகொள்ள லாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in