Published : 07 Jul 2024 09:28 AM
Last Updated : 07 Jul 2024 09:28 AM
தருமபுரி/மேட்டூர்: காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று மாலை 3,000 கனஅடியாகக் குறைந்தது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 5-ம் தேதி காலை விநாடிக்கு 1,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து, அன்று மாலை 4,000 கனஅடியாக அதிகரித்தது.
நேற்று காலை அளவீட்டின் போதும் விநாடிக்கு 4,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை 6 மணி அளவீட்டின்போது 3,000 கனஅடியாகக் குறைந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 1,281 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 1,465 கனஅடியாக அதிகரித்தது.
காவிரிக் கரையோர மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு1,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணை நீர்மட்டம் நேற்று 39.76 அடியாகவும், நீர் இருப்பு 11.96 டிஎம்சியாகவும் இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT