இணையவழி குற்றங்களை தடுக்க போலீஸார் - வங்கி அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: காவல் ஆணையர் வலியுறுத்தல்

இணையவழி குற்றங்களை தடுப்பது குறித்து காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் தலைமையில் போலீஸார், வங்கி அதிகாரிகள் ஒருங்கிணைப்பு கூட்டம், சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இணையவழி குற்றங்களை தடுப்பது குறித்து காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் தலைமையில் போலீஸார், வங்கி அதிகாரிகள் ஒருங்கிணைப்பு கூட்டம், சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
Updated on
1 min read

சென்னை: இணையவழி குற்றங்களைத் தடுக்க போலீஸார் - வங்கி அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் வலியுறுத்தினார்.

இணையவழி குற்றங்கள் அதிகரித்துள்ளன. போலீஸார் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் மோசடிக் கும்பல் ஆசையை தூண்டி,பணம் பறிக்கும் நிகழ்வுகள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.

எனவே, இதுபோன்ற மோசடிகளைத் தடுப்பது மற்றும் இணையவழி குற்றங்களை கையாள்வது தொடர்பாக சென்னை காவல்ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்தலைமையில் மத்திய குற்றப்பிரிவுபோலீஸார் மற்றும் வங்கி அதிகாரிகள் ஒருங்கிணைப்புக் கூட்டம்வேப்பேரியில் உள்ள காவல்ஆணையர் அலுவலகத்தில் நேற்றுநடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகளைச் சார்ந்த பொறுப்பு அதிகாரிகள் 60 பேர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய காவல் ஆணையர், சந்தீப் ராய் ரத்தோர், சமீபத்தியஇணையவழி குற்ற வழக்குகளின் பல்வேறு அம்சங்கள் குறித்து விளக்கினார்.

இணையவழி குற்ற வழக்குகளில் ஈடுபடும் நபர்களைக் கண்டறிவதற்கும், இணையவழி குற்றங்களை தடுப்பதற்கும் காவல் துறையினர் மற்றும் வங்கி அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

மேலும், ``சென்னை மத்திய குற்றப்பிரிவு, இணையவழி குற்றப்பிரிவில் 2023-ம் ஆண்டில் மொத்தம்312 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 57 பேர் கைது செய்யப்பட்டு ரூ.86 லட்சத்து 68,749 மீட்கப்பட்டுள்ளது.

அதேபோல் 2024-ம் ஆண்டுஜூன் மாதம் வரை மொத்தம் 230வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் வங்கிகளின் சீரிய உதவியுடன் குற்ற செயல்களில் ஈடுபட்ட31 நபர்கள் கைது செய்யப்பட்டுரூ.98 லட்சத்து 74,057 மீட்கப்பட்டுள்ளது'' என்றார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் செந்தில் குமாரி, துணை ஆணையர்கள் நிஷா, கீதாஞ்சலி, ஸ்டாலின், உதவி ஆணையர் காவியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in