Published : 11 May 2018 09:31 AM
Last Updated : 11 May 2018 09:31 AM

புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து உள்ளிட்ட 4 கோரிக்கைகளை ஏற்காவிட்டால் வேலைநிறுத்த போராட்டம்: எஸ்ஆர்எம்யு பொதுச்செயலாளர் என்.கண்ணையா எச்சரிக்கை

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ரயில்வே துறையில் தனியார் மயமாக்கலை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 4 கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வேலை நிறுத்த போராட்டத்தை விரை வில் அறிவிப்போம் என்று எஸ்ஆர்எம்யு பொதுச்செயலாளர் என்.கண்ணையா தெரிவித்துள் ளார்.

அகில இந்திய ரயில்வே தொழிலாளர்கள் சம்மேளனத் தின் (ஏஐஆர்எப்) சார்பில் ரயில்வே தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தெற்கு ரயில்வேயின் அனைத்து கோட்டங்கள் மற்றும் கிளைகள் முன்பு தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. 8-ம் தேதி காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த 60 மணி நேர தொடர் உண்ணாவிரத போராட்டம் நேற்று மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. சென்னை சென்ட்ரல் அருகே நடந்த போராட்டத்தில் எஸ்ஆர்எம்யு தலைவர் சி.ஏ.ராஜா ஸ்ரீதர், பொதுச்செயலாளர் என்.கண்ணையா, துணை பொதுச்செயலாளர்கள் ஜி.ஈஸ்வர்லால், பால்மாக்ஸ்வெல் ஜான்சன் உட்பட 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்த போராட்டம் தொடர்பாக என்.கண்ணையா நிருபர்களிடம் கூறியதாவது:

``புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, உத்தரவாதத்துடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும், ரயில்வே துறையில் தனியார் மயமாக்கலை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து 2016-ம் ஆண்டில் வேலைநிறுத்த போராட்டம் செய்வதாக அறிவித்தோம். அதன்பிறகு 4 பேர் கொண்ட மத்திய அமைச்சர் களின் குழு எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. எங்கள் கோரிக்கைகளை ஏற்பதாக அவர் கள் உறுதி அளித்ததால் போராட்ட அறிவிப்பை வாபஸ் பெற்றோம். இதுவரையில் எங்களது கோரிக்கை ஏற்கப்படவில்லை.

அதற்கு மாறாக ரயில்வே துறையில் தனியார் மயமாக்கல் அதிகரித்து வருகிறது. ரயில் இயக்கம், பராமரிப்பு போன்ற பணிகளைத் தனியார் நிறுவனங்களிடமே ஒப்படைக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தற்போது, ரயில்வே பள்ளிகளை மூடுவதற்கும் உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற கொள்கைகளை கைவிடக் கோரி முதல்கட்டமாக உண்ணாவிரத போராட்டம் நடத்தியுள்ளோம். அடுத்தகட்ட போராட்டம் குறித்து மற்ற தொழிற்சங்கங்களுடன் பேசி அறிவிக்கப்படும். எங்களது கோரிக்கைகளை ஏற்காவிட்டால், வேலைநிறுத்த போராட்டத்தை அறிவிப்போம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x