Published : 10 May 2018 09:40 am

Updated : 10 May 2018 09:40 am

 

Published : 10 May 2018 09:40 AM
Last Updated : 10 May 2018 09:40 AM

காவல் நிலையத்தில் மர்மமான முறையில் இறந்த சிற்றரசு வழக்கை சிறப்பு புலனாய்வு குழு மூலம் விசாரிக்க வேண்டும்: விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல்

காஞ்சி மாவட்டம், சீக்கானாங்குப்பத்தில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்தநாள் நிகழ்ச்சியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று கலந்து கொண்டார். பின் னர் சூணாம்பேடு பகுதியில் தனியார் நிகழ்ச்சிக்கு வந்த அவர் போலீஸ் விசாரணைக்கு அழைத் துச் செல்லப்பட்டு உயிரிழந்த சிற்றரசுவின் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் திருமாவள வ ன் கூறியதாவது: நெல்லையில் மணல் திருட்டை தடுக்கச் சென்ற காவலர் ஜெகதீஸ்வரன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், போலீஸாருக்கு தொடர்பு உள்ளதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே, சிறப்பு புலனாய்வு குழு மூலம் விசாரணை மேற்கொள்ள வேண்டும். அவரது குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்.


சூணாம்பேட்டில் சாதாரண புகாரின்பேரில் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற சிற்றரசு அங்கே மர்மமான முறையில் இறந்துள்ளார். அவரது உடல் 8 நாட்களாக மருத்துவமனையில் உள்ளது. உடலை வாங்க மறுத்த உறவினர்கள், கூடுதல் மருத்து வர் மூலம் உடற்கூறு ஆய்வு செய்து, வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றனர். ஆனால், வழக்கை விசாரிக்கும் மாஜிஸ்திரேட் ஒப்புக்கொள்ளவில்லை. அதனால், உறவினர்கள் உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுதாக்கல் செய்துள்ளனர். இம்மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது. அதனால், இவ்வழக்கிலும் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைத் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக் கோரிக் வரும் 22-ம் தேதி நடைபெறும் போராட்டத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு அளிக்கும். கர்நாடகத் தேர்தலைக் காரணம் காட்டி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு கால அவகாசம் கேட்பது தவறானது.

நீட் தகுதித் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளைப் பயங்கரவாதிகளை சோதனை செய்வது போல் சோதனை செய்கின்றனர். இது தலைகுனிவை ஏற்படுத்தக் கூடியது. இவ்வாறு திருமாவள வன் தெரிவித்தார்.

அன்பு வாசகர்களே....


வரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசைSign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author