பருவ இதழ்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு பயண அட்டை வழங்கப்படுமா? - அமைச்சர் சாமிநாதன் பதில்

அமைச்சர் சாமிநாதன்
அமைச்சர் சாமிநாதன்
Updated on
1 min read

சென்னை: செய்தியாளர் அட்டை (Press Pass) பெற்றுள்ள பருவ இதழ்கள் / கால முறை இதழ்களில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கு பேருந்து பயண அட்டை வழங்குவது தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் பத்திரிகையாளர்களுடன் பொது மக்களை மாதந்தோறும் நேரில் சென்று சந்தித்து, அரசின் நலத்திட்டங்கள் மூலம் பயன் பெற்றவர்களிடம், அதன் பயன்கள் பற்றிய விவரங்கள் அறிந்து வருகிறார்கள். இந்நிகழ்விற்கு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் “நிறைந்த மனம்” என்ற தலைப்பில் நிகழ்ச்சியை நடத்த தமிழ்நாடு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

நடப்பாண்டில், அங்கீகார அட்டை (Accreditation Card) பெற்றுள்ள பத்திரிகையாளர்களுக்கு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் தலைமையிட பத்திரிகையாளர்கள் பயணம் செய்திட 457 எண்ணிக்கையிலும், பிற மாவட்டங்களில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் பேரில் 2,917 எண்ணிக்கையிலும் ஆக மொத்தம் 3,374 கட்டணமில்லாப் பேருந்து பயண அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. செய்தியாளர் அட்டை (Press Pass) பெற்றுள்ள பருவ இதழ்கள் / கால முறை இதழ்களில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கு பேருந்து பயண அட்டை வழங்குவது தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in