Published : 22 May 2018 07:43 AM
Last Updated : 22 May 2018 07:43 AM

10 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு நாளை வெளியாகிறது

தமிழகம், புதுச்சேரியில் 10 லட் சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ள எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படுகின்றன. காலை 9.30 மணிக்கு அனைத்து மாணவர்களுக்கும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகள் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும்.

தமிழகம், புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 16-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 20-ம் தேதி முடிவடைந்தது. 12,337 பள்ளிகளில் இருந்து 4,83,120 மாணவர்கள், 4,81,371 மாணவிகள் என 9,64,491 பேர் தேர்வு எழுதினர். இதுதவிர 36,649 பேர் தனித்தேர்வர்களாக தேர்வில் கலந்துகொண்டனர்.

பிறகு, 67 மையங்களில் நடந்த விடைத்தாள் திருத்தும் பணி மே 7-ல் முடிவடைந்தது. இந்நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகளை அரசு தேர்வுத் துறை நாளை (மே 23) காலை 9.30 மணிக்கு வெளியிடுகிறது. மாணவர்கள் அளித்திருந்த செல் போன் எண்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவுகள் மதிப் பெண்களுடன் அனுப்பப்படும்.

இதுதவிர, www.tnresults.nic.in www.dge1.tn.nic.in www.dge2.tn. nic.in ஆகிய இணையதள முகவரியிலும் பார்க்கலாம். பொதுத் தேர்வுகளில் ரேங்க் பட்டியல் வெளியிடும் முறை நிறுத்தப்பட்டது. அதன்படி, கடந்த 16-ம் தேதி வெளியிடப்பட்ட பிளஸ் 2 தேர்வு முடிவுகளிலும் ரேங்க் பட்டியல் வெளியிடப்படவில்லை. அதேபோல, நாளை வெளியாக உள்ள எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகளிலும் ரேங்க் பட்டியல் எது வும் வெளியிடப்படாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x