குட்டி பத்மினிக்கு எதிரான மோசடி வழக்கை ரத்து செய்தது ஐகோர்ட்

நடிகை குட்டி பத்மினி
நடிகை குட்டி பத்மினி
Updated on
1 min read

சென்னை: பாஜக நிர்வாகியும், நடிகையுமான குட்டி பத்மினிக்கு எதிரான மோசடி வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மடிப்பாக்கத்தில், ரமேஷ் என்பவருக்கு சொந்தமான சுமார் 8 கோடி ரூபாய் மதிப்புடைய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபு பாஷா என்பவரின் மனைவி இம்ரானா என்பவருக்கு விற்றதாகக் கூறி, நடிகையும், பாஜக நிர்வாகியுமான குட்டி பத்மினிக்கு எதிராக, கடந்த 2011-ம் ஆண்டு மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கு, பின் உயர் நீதிமன்ற உத்தரவின்படி, மத்திய குற்றப் பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, நடிகை குட்டி பத்மினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன், நிலத்தின் உரிமை கோரி புகார்தாரர் தரப்பில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், உரிமையியல் தொடர்பான இந்த பிரச்னைக்கு குற்றவியல் வர்ணம் பூச முடியாது எனக் கூறி, நடிகை குட்டி பத்மினிக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in