Published : 28 Jun 2024 06:05 AM
Last Updated : 28 Jun 2024 06:05 AM

ஓய்வுபெற்ற மருத்துவர்கள் மீண்டும் நியமனம்; மருத்துவ கல்வி - ஆராய்ச்சி இயக்குநரகம் முற்றுகை: மருத்துவர்கள் போராட்டம்

சென்னை: ஓய்வுபெற்ற அரசு மருத்துவர்களை மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதை கைவிடக்கோரி மருத்துவ கல்வி மற்றும்ஆராய்ச்சி இயக்குநரகத்தை மருத்துவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ளமருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சிஇயக்குநரகத்தை (டிஎம்இ) நேற்று ஜனநாயக தமிழ்நாடு அரசுடாக்டர்கள் சங்க மாநிலத் தலைவர் மருத்துவர் பி.பாலகிருஷ்ணன் தலைமையில் நிர்வாகிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிண்டி மருத்துவமனை: அப்போது, கிண்டி கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி ஓய்வுபெற்ற பின்னரும், மீண்டும் அதே பொறுப்பில் அவரை நியமித்த உத்தரவை திரும்பப்பெற வேண்டுமென கோஷமிட்டனர்.

இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் பி.பாலகிருஷ்ணன் கூறியதாவது: கிண்டி கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி கடந்த மாதத்துடன் ஓய்வுபெற்றார்.

அவரை மீண்டும் அப்பதவியில் கொண்டுவர முயற்சிகள் நடந்தபோதே, நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனாலும், மீண்டும் அவர் மருத்துவமனை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர், இயக்குநராக இருந்தபோது வாங்கிய மருத்துவ உபகரணங்கள் பழுதடைந்துள்ளன.

வெள்ளை அறிக்கை: அங்கு, மக்கள் வரத்தும்குறைந்துள்ளது. வாங்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள் செயல்பாடு குறித்து வெள்ளைஅறிக்கை வெளியிட வேண்டும். தற்போது பார்த்தசாரதி ஓய்வூதியம் பெறுவதுடன், ஒப்பந்த அடிப்படையினான ஊதியம் என 2 ஊதியங்களை பெற்று வருகிறார்.

அதேபோல், ஓமந்துாரார் அரசு மருத்துவமனை இயக்குநர் உட்பட 7 மருத்துவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.

பதவி உயர்வுக்காக காத்திருப்பு: சீனியாரிட்டி அடிப்டையில் பதவி உயர்வுக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் காத்திருக்கும் நிலையில், ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதை அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x