Published : 28 Jun 2024 06:15 AM
Last Updated : 28 Jun 2024 06:15 AM

அடையாறு உட்பட 3 மண்டலங்களில் குழாய் குடிநீர் விநியோகம் ஒருநாள் நிறுத்தம்

சென்னை: நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் பிரதான குழாயில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் ஜூன் 30 காலை 9 மணி முதல் ஜூலை 1-ம் தேதி காலை 9 மணி வரை ஒருநாள் மட்டும் அடையாறு,பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலப் பகுதிகளில் குழாய் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இதுகுறித்து சென்னைக் குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நெம்மேலியில் அமைந்துள்ள நாளொன்றுக்கு 110 மில்லியன் லிட்டர் உற்பத்தித் திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் பிரதான குழாயில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ஜூன்30-ம் தேதி காலை 9 மணிமுதல் ஜூலை 1-ம் தேதிகாலை 9 மணி வரை (1 நாள் மட்டும்) குழாய்கள் மூலம்குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

மண்டலம்-13 (அடையாறு (பகுதி) திருவான்மியூர், பள்ளிப்பட்டு கோட்டூர் கார்டன், ஆர்.கே.மடம் தெரு, இந்திரா நகர் OHT, மண்டலம்-14 (பெருங்குடி) கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், மண்டலம்-15 (சோழிங்கநல்லூர்) ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, அக்கரை, எழில்நகர், கண்ணகி நகர், காரப்பாக்கம், வெட்டுவாங்கேணி, சோழிங்கநல்லூர், ஒக்கியம் - துரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் குழாய் மூலம் குடிநீர் வழங்குவது நிறுத்தப்படும்.

எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, போதுமான அளவு குடிநீரைச் சேமித்து வைக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரத் தேவைக்கு லாரிகள் மூலம் (Dial forWater) குடிநீர் பெற https://cmwssb.tn.gov.in/ என்றஇணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.

மேலும், கூடுதல் தகவல்களுக்கு 044-4567 4567 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று சென்னைக் குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x