Published : 28 Jun 2024 06:16 AM
Last Updated : 28 Jun 2024 06:16 AM

மே, ஜூன் மாதங்களுக்கான துவரம் பருப்பு, பாமாயில் ஜூலை முதல் வாரத்துக்குள் விநியோகிக்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி உறுதி

சென்னை: குடும்ப அட்டைதாரர்களுக்கு மே, ஜூன் மாதங்களுக்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவை ஜூலை மாத முதல் வாரத்துக்குள் விநியோகித்து முடிக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சக்கர பாணி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடை பெற்றது. அதில் பேசிய திமுக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கடந்த மே, ஜூன் மாதங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பருப்பு, பாமாயில் வழங்கப்படாதது குறித்து கேள்வி எழுப்பினர்.

தேர்தல் நடத்தை விதியால் தாமதம்: இதற்கு பதில் அளித்து உணவுத்துறை அமைச்சர் அர. சக்கரபாணி பேசியதாவது: தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் அனுமதி பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. அதன் பிறகு 2 கோடி பாமாயில் பாக்கெட்கள், தேவையான துவரம்பருப்பு ஆர்டர் செய்யப்பட்டு, அனைத்தும் நியாயவிலை கடைகளுக்கும் விநியோகம் செய்யப்பட் டுள்ளன.

வரும் ஜூலை மாத முதல் வாரத்துக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மே மற்றும்ஜூன் மாதத்துக்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் விநி யோகிக்கப்பட்டு விடும். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

பின்னர் அவர் வெளியிட்ட அறிவிப்புகளில் இடம்பெற்றிருப்பதாவது: பொது விநியோகத் திட்ட பொருட்களை துரிதமாக அனுப்ப போக்குவரத்து வழித்தடங்கள் சீரமைக்கப்படும். 100 அமுதம் நியாயவிலைக் கடைகள் ரூ.5 கோடியில் மேம்படுத்தப்படும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் தனியார் அரவை ஆலைகளில் மின் நுகர்வு கண் காணிக்கப்படும்.

பணியாளர்களுக்கு சீருடை: நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் 4,710 பணியாளர்களுக்கு நடப்பு நிதியாண்டில் சீருடைகள் வழங்கப்படும். தரக்கட்டுப் பாட்டு பணியாளர்களுக்கு, இன்றியமையா உணவு பொருட்களின் தரத்தை உறுதி செய்ய ரூ.25 லட்சத்தில் பயிற்சி அளிக்கப்படும் என்பன உள்ளிட்ட 20 அறிவிப்பு களை வெளியிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x