Published : 28 Jun 2024 06:07 AM
Last Updated : 28 Jun 2024 06:07 AM

இறந்த வழக்கறிஞர்களின் குடும்பங்களுக்கு சேமநல நிதியாக 10 நாட்களில் ரூ.7 கோடி வழங்க வேண்டும்: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது போல வழக்கறிஞர்கள் சேம நல நிதியை புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வழக்கறிஞர்களின் குடும்பத்துக்கும் வழங்க வேண்டு மெனக் கோரி பரிதாபேகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் வழக்கறிஞர்களின் குடும்பத்துக்கு சேமநல நிதியாக எவ்வளவு தொகைவழங்கப்படுகிறது என்பது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அதற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.ஆர்.ஜோதிமணியன், தமிழகத்தில் பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்கும் வழக்கறிஞர்கள் இறக்க நேரிட்டால் அவர்களின்குடும்பத்துக்கு சேமநல நிதியாக ரூ. 10 லட்சம் வழங்கப்படுகிறது. இதுவரை இந்த தொகை கோரி 441 வழக்கறிஞர்கள் குடும்பத் தினரின் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன,

வழக்கறிஞர்களின் சேமநல நிதிக்காக ஆண்டுக்கு ரூ.10 கோடியை தமிழக அரசு வழங்கி வந்தது. கரோனா காலகட்டத்தில் வழக்கறிஞர்கள் பலர் மரணமடைய நேரிட்டதால் அந்த தொகையை ரூ.20 கோடியாக உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் உத்தரவி்ட்டார்.

அந்த ரூ. 20 கோடியில் ரூ.5.25 கோடி மட்டுமே தமிழகஅரசு வழங்கியுள்ளது. எஞ்சிய தொகையையும் வழங்கினால் 441 விண்ணப்பதாரர்களுக்கும் சேமநலநிதியை வழங்க முடியும், எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்றுமீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் மற்றும் சிறப்புஅரசு ப்ளீடர் ஜான் ராஜாசிங் ஆகியோர் ஆஜராகி, கடந்த 2022-ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் நடந்த விழாவில்பங்கேற்ற தமிழக முதல்வர் வழக்கறிஞர்களுக்கான சேம நல நிதியை ரூ. 7லட்சத்தில் இருந்து ரூ. 10 லட்சமாகஉயர்த்தி அறிவித்தார்.

அதுதொடர்பான அரசாணை 2022 ஆக.27 அன்று வெளியானது. இதற்கான நிதியை அரசு விரைவில் வழங்கும், என்றனர். அதையடுத்து நீதிபதிகள், அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றால் ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்கும் தமிழக அரசு, வழக்கறிஞர்களின் குடும்பத்தினரின் நலனுக்காக வழங்கப்படும் சேமநல நிதியை குறிப்பிட்ட காலத்துக்குள் கட்டாயம் வழங்கவேண்டும். தற்போது வழக்கறிஞர்களின் சேமநல நிதியில் ரூ. 13 கோடியே3 லட்சத்து 14,291 இருப்பு உள்ளது.

எனவே, தமிழக அரசு ரூ.7 கோடியை10 நாட்களுக்குள் உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பெயருக்கு வழங்க வேண்டும். அந்த தொகை வந்ததும் அரசு தலைமை வழக்கறிஞர் தலைவராக உள்ள சேமநல நிதி அறக்கட்டளைக்கு தலைமைப் பதிவாளர் உடனடியாக வழங்க வேண்டும்.

பின்னர் ஒரு வார காலத்துக்குள் இறந்த வழக்கறிஞர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 441 விண்ணப்பதாரர்களில் முதற்கட்டமாக 200 பேருக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். அது தொடர்பான அறிக்கையை ஜூலை 19-ம் தேதி தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத் துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x