தொகுதிக்கு நன்மை நடக்க என்ன செய்ய வேண்டும்? - எம்எல்ஏக்களுக்கு துரைமுருகன் அறிவுரை

தொகுதிக்கு நன்மை நடக்க என்ன செய்ய வேண்டும்? - எம்எல்ஏக்களுக்கு துரைமுருகன் அறிவுரை
Updated on
1 min read

சென்னை: சட்டப்பேரவையில் தொகுதி குறித்து உறுப்பினர்கள் பேசினால் மட்டும் போதாது, அடிக்கடி அமைச்சர்களை சந்தித்து நினைவுபடுத்தினால் தான் தொகுதிக்கு நன்மை நடக்கும் என்று சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சரும், அவை முன்னவருமான துரைமுருகன் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று நிதி மற்றும் மனிதவள மேலாண்மை, பொதுத்துறை, திட்டம் வளர்ச்சி சிறப்பு முயற்சிகள் துறை, மின்துறை உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கை விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர்.

அப்போது நீர்வளத் துறைஅமைச்சரும், அவை முன்னவருமான துரைமுருகன் பேசியதாவது: இப்போது பேசிய பாமக உறுப்பினர், என்னுடைய இலாகா குறித்து 10 ஊர்களை சொல்லி செய்ய சொல்கிறார். இப்போதே அது எனக்கு நியாபகம் இல்லை. நான் எப்போது செய்வேன். நாங்கள் எல்லாம் அந்த காலத்தில் பேரவையில் பேசிய பின்னர், சம்பந்தப்பட்ட அமைச்சர்களை அடிக்கடி பார்த்து நினைவூட்டுவோம். எம்எல்ஏ மூன்று, நான்கு முறை வருகிறார் என நினைத்து அமைச்சர்கள் செய்வார்கள்.

இது என் அனுபவம்: அதனால், பேரவையில் தொகுதி குறித்து பேசுகின்ற உறுப்பினர்கள், காரியம் ஆக வேண்டுமானால், சம்பந்தப்பட்ட அமைச்சர்களை அடிக்கடி நேரில் சந்தித்து நினைவுபடுத்தி பேசினால் தான் நடக்கும். இங்கு பேசுவதால் மட்டும் நடக்காது. தொகுதி குறித்து பேரவையில் பேசுவது மட்டுமின்றி தொகுதிக்கு நன்மை செய்ய வேண்டும். இது என் அனுபவத்தில் சொல்கிறேன்.

இவ்வாறு நீர்வளத்துறை அமைச்சர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in