“கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்பு எண்ணிக்கை மறைக்கப்படுகிறது” - எவிடன்ஸ் கதிர்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி: “மெத்தனால் கலந்த கள்ளச் சாராயத்தை அருந்தி இதுவரை 58 பேர் உயிரிழந்திருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எங்களுக்கு கிடைத்த தகவல்படி 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கக் கூடும்,” என்று சமூக செயற்பாட்டாளர் எவிடன்ஸ் கதிர் கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெருவோரை சந்திப்பதற்காக, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு திங்கள்கிழமை வந்த சமூக செயற்பாட்டாளர் எவிடன்ஸ் கதிர், மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு செல்ல முயன்றபோது அங்கிருந்த காவலர்கள் அவரைத் தடுத்து நிறுத்தி உள்ளனர். தடுத்து நிறுத்துவதற்கான காரணத்தைக் கேட்டபோது, யாருக்கும் அனுமதி அளிக்கக் கூடாது என மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்ததாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “மெத்தனால் கலந்த கள்ளச் சாராயத்தை அருந்தி இதுவரை 58 பேர் உயிரிழந்திருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எங்களுக்கு கிடைத்த தகவல் படி 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சுகிறோம். இந்த நிலையில் தான் மருத்துவமனைக்குள் செல்ல முற்பட்டபோது என்னை தடுத்து நிறுத்தினர்.

மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட மருத்துவமனையில் செல்வதற்கு அனுமதி மறுக்கப்படுவது என்பது விந்தையாக உள்ளது. எதற்காக இவர்கள் என்னை உள்ளே அனுமதிக்க அஞ்சுகின்றனர்? நான் உள்ளே சென்றால் உண்மைகள் வெளிவந்து விடுமோ?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in