செவிலியர்களுக்கு ஜெர்மன், ஜப்பான் மொழி இலவசப் பயிற்சி: தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு

மாதிரிப் படம்
மாதிரிப் படம்
Updated on
1 min read

சென்னை: செவிலியர்கள் ஜெர்மன், ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளில் எளிதில் வேலைவாய்ப்பு பெறும் வண்ணம் அவர்களுக்கு ஜெர்மன், ஜப்பான் மொழியை இலவசமாக அளிக்க தமிழக அரசு நிறுவனம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சி.என்.மகேஸ்வரன் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: முதல்முறையாக செவிலியர்களுக்கு ஜெர்மன், ஜப்பான் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிப் பயிற்சியை இலவசமாக அளிக்க அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் முயற்சி எடுத்துள்ளது.

வெளிநாட்டு மொழியை கற்க விரும்பும் செவிலியர்கள் பிஎஸ்சி நர்சிங் அல்லது டிப்ளமா நர்சிங் படித்திருக்க வேண்டும். செவிலியர்களின் வசதியை கருத்தில்கொண்டு மொழிப்பயிற்சியானது ஆன்லைன் வாயிலாகவும், நேரடியாகவும் வழங்கப்படும்.

இப்பயிற்சியில் சேர விரும்பும் செவிலியர்கள் முழு விவரங்களையும் www.omcmanpower.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 63791 79200 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in