Published : 04 May 2018 09:26 AM
Last Updated : 04 May 2018 09:26 AM

குட்கா வழக்கில் விரைவில் எப்ஐஆர் பதிவு செய்ய சிபிஐ-யில் அன்பழகன் மனு

குட்கா விவகாரத்தில் விரைவில் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்ய வேண்டும் என்று சிபிஐ அலுவலகத்தில் ஜெ.அன்பழகன் எம்எல்ஏ மனு கொடுத்துள்ளார்.

2016-ம் ஆண்டு குட்கா தயாரிப்பு நிறுவன பங்குதாரர்களில் ஒருவரான மாதவ ராவ் என்பவரின் வீட்டில் வருமானவரித் துறை அதிகாரி கள் சோதனை நடத்தினர். அப்போது டைரி ஒன்று சிக்கியது. அந்த டைரியில் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உட்பட பலருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டிருந் தது.

சிபிஐ விசாரணை

இந்த குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மனுத் தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு கடந்த 26-ம் தேதி தீர்ப்பு வழங்கியது.

ஆதாரங்களை அழிக்க...

அதைத் தொடர்ந்து சென்னை சாஸ்திரி பவனில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் நேற்று ஒரு மனு கொடுத்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:

“குட்கா வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உட்பட உயர் அதிகாரிகள் பலர் சிக்கியுள்ளனர். எனவே, ஆதாரங்களை அழிக்க முயற்சி நடக்கலாம். அதற்குள் சிபிசிஐடி வசம் இருக்கும் ஆதாரங்களை உடனடியாக சிபிஐ வாங்க வேண்டும். அதன் பின்னர் விரைவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்” என்று கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x