Published : 24 Jun 2024 07:15 AM
Last Updated : 24 Jun 2024 07:15 AM

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய விவகாரம் எடுபடாது: திமுக ஆர்.எஸ்.பாரதி கருத்து

புதுக்கோட்டை: திமுக அமைப்புச் செயலாளர்ஆர்.எஸ்.பாரதி புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு சிபிஐ விசாரணை தேவை என்று கேட்பதற்கு, முன்னாள் முதல்வர் பழனிசாமி தகுதியற்றவர். அவர் முதல்வராக இருந்தபோது செய்தஊழலுக்காக வழக்கு தொடரப்பட்டபோது சிபிஐ விசாரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அவர் உச்ச நீதிமன்றம் சென்று, சிபிஐ விசாரணைக்கு தடை வாங்கினார்.

நேர்மையான விசாரணை: மேலும், சிபிஐ விசாரிக்கக் கோருவதெல்லாம் இந்த வழக்கைதாமதப்படுத்தி, வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை மறைப்பதற்கு முயற்சி செய்வதாகும். சிபிசிஐடி விசாரணை நேர்மையாக நடைபெற்று வருகிறது. ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் இருந்துதான் மெத்தனால் வந்தது. அதற்காக புதுச்சேரி முதல்வர் ராஜினாமா செய்வாரா? அவரை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறும் தைரியம் பழனிசாமிக்கு உள்ளதா?. எனவே, இதற்கெல்லாம் முதல்வர்மு.க.ஸ்டாலின் பதவி விலகத்தேவையில்லை. கள்ளச் சாராயவிவகாரத்தில் அனைவரையும் கூண்டோடு பணியிடை நீக்கம்செய்து முதல்வர் உத்தரவிட் டுள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர் தலுக்கு முன்பாக இப்படி ஒருசம்பவம் நடைபெறுகிறது என்றால்,இதில் அரசியல் பின்புலம் இருக்கிறதா, யாரேனும் திட்டமிட்டு இந்த செயலை செய்தார்களா என்பது குறித்து விசாரணையில்தான் தெரியவரும்.

அதேநேரத்தில், விக்கிர வாண்டி இடைத்தேர்தலில் கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயவிவகாரம் எடுபடாது. நீட் தேர்வுவிவகாரத்தில் நீதிமன்ற கண்டனத்துக்குப் பிறகே, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில், நீதிமன்றம் நல்ல முடிவெடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x