Published : 21 May 2018 08:12 AM
Last Updated : 21 May 2018 08:12 AM

கேரள முதல்வருடன் கமல்ஹாசன் சந்திப்பு

கேரள முதல்வர் பினராயி விஜயனை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேற்று கொச்சியில் சந்தித்து பேசினார்.

தனியார் தொலைக்காட்சி விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக கமல்ஹாசன் சென்னையிலிருந்து நேற்று கேரள மாநிலம் கொச்சிக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு நேற்று மதியம் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகம், தேசிய அளவில் நடைபெற்று வரும் அரசியல் நிகழ்வுகள் குறித்து இருவரும் பேசியுள்ளனர்.

கமல்ஹாசன் கட்சி தொடங்குவதற்கு முன்பு பினராயி விஜயனை அவரது வீட்டில் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு, கிசிச்சைக்காக கடந்த மார்ச் மாதம் அவர் சென்னை வந்தபோதும் கமல்ஹாசன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தது குறிப்பிடத் தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x