1,000 பெண்கள், திருநங்கை ஓட்டுநர்களுக்கு ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம்: தமிழக அரசு

1,000 பெண்கள், திருநங்கை ஓட்டுநர்களுக்கு ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம்: தமிழக அரசு
Updated on
1 min read

சட்டப்பேரவையில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அறிவிப்புகளை அத்துறைகளின் அமைச்சர் சி.வி.கணேசன் நேற்று வெளியிட்டார். அதில், தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 1,000 பெண் மற்றும் திருநங்கை ஓட்டுநர்கள் புதியதாக ஆட்டோ வாகனம் வாங்கும் செலவினத்தில் தலா ரூ.1 லட்சம் மானியமாக வழங்கப்படும்.

பட்டாசு தொழிற்சாலை களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு புத்தாக்கப்பயிற்சி ரூ.24.90 லட்சத்தில் வழங்கப்படும். தொழிற்சாலைகளில் பயன்பாட்டில் உள்ள நவீன தொழில்நுட்ப யுக்திகள் மற்றும்செயற்கை நுண்ணறிவு தொடர்பாக ரூ.15 லட்சத்தில் பயிற்சி வழங்கப்படும். தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக அலுவலர்களுக்கு ரூ.29.65லட்சத்தில் மடிக்கணிகள் வழங்கப்படும். தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் நிர்வாக அலுவலகம் மற்றும் கணினி தொடர்பான வசதிகள் மேம்படுத்தப்படும்.

புதியதாக வளர்ந்து வரும்தொழில் வாய்ப்புகள் மற்றும் பிற தொழில் வாய்ப்புகள் குறித்து ஊடாடல் காணொலி காட்சிப்பதிவுகள் கல்வி தொலைக்காட்சி மூலமாக ஒளிபரப்பப்படும். 32 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள வகுப்பறைகளில் இணையதள வசதியுடன் கூடிய ஸ்மார்ட் டிவி வசதி ரூ.10.11 லட்சத்தில் ஏற்படுத்தி தரப்படும்.

தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில்பயிற்சி பெற்று வரும் மாணவர்களுக்கு 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் நவீன தொழில் நுட்பங்களில் குறுகியகால பயிற்சி அளிக்கப்படும்.

குறு, சிறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு அவர்களின் தொழில் திறனைமேம்படுத்துவதற்கு 71 அரசுதொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி வசதிகள் செய்துதரப்படும். தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களுக்கு வழங்கப்படும் பயிற்சி கட்டணம் விரைவாக வழங்குவதற் காக இணையதள வசதிகள் உருவாக்கப்படும்.

தனியார் தொழிற்பயிற்சிநிலைய பயிற்சியாளர்களுக் கும், அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மொத்தம் 12 அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in