சிபிஐ விசாரணை நடத்த பாமக வலியுறுத்தும்; தொடர் போராட்டம் நடத்துவோம் - அன்புமணி @ கள்ளக்குறிச்சி

ராமதாஸ்
ராமதாஸ்
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி: சிபிசிஐடி விசாரணையால் எவ்வித பயனும் ஏற்படாது என்பதால் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். இதை பாமக வலியுறுத்தும். இச்சம்பவம் தொடர்பாக அமைச்சர்கள் வேலு, முத்துசாமி ஆகியோரை பதவியில் இருந்து நீக்க வேண்டும். கள்ளக்குறிச்சி உயிரிழப்புகள் தமிழகத்துக்கு அவமானம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

கள்ளச் சாராயம் அருந்தியதில் உடல் நலம் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சையில் உள்ளவர்களை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (வெள்ளிக்கிழ்மை) நேரில் சந்தித்து நலம் விசாரித்தாரர்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு மற்றும் பொறுப்பற்ற அரசு நிர்வாகங்களால் கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த விஷச் சாராயத்தால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த உயிரிழப்புகள் அதிகரிக்கரிக்கக்கூடும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

மெத்தனால் குடித்தவர்களுக்கு 10 மணி நேரத்துக்குள் முறிவு மருந்துகள் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் எந்தவொரு அரசு மருத்துவமனையிலும் போதிய மருந்துகள் கையிருப்பு இல்லை, இச்சம்பவம் குறித்து உண்மையான விசாரணை நடத்த வேண்டும். மேலும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சி பிசிஐடி விசாரணையால் எவ்வித பயனும் ஏற்படாது என்பதால் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.இதை பாமக வலியுறுத்தும். இச்சம்பவம் தொடர்பாக அமைச்சர்கள் வேலு, முத்துசாமி ஆகியோரை பதவியில் இருந்து நீக்க வேண்டும். இங்குள்ள எம்எல்ஏக்கள் மீது உடன் நடவடிக்கை தேவை. கள்ளக்குறிச்சி சம்பவத்தைக் கண்டித்து பாமக சார்பில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in