திமுக அரசைக் கண்டித்து ஜூன் 25-ல் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்: பிரேமலதா

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்
Updated on
1 min read

சென்னை: போதை இல்லா தமிழகத்தை உருவாக்கத் தவறிய ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு போதை இல்லா தமிழகத்தை உருவாக்கத் தவறிவிட்டது. திமுக அரசின் நிர்வாகச் சீர்கேட்டைக் கண்டித்து தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் சார்பாக (25-6-2024) செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.00 மணி அளவில் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க இருக்கிறது.

இதில் மாவட்ட கழக செயலாளர்கள், உயர் மட்ட குழு உறுப்பினர்கள், அனைத்து ஒன்றிய நகர பேரூர் கழக கிளைக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணி, பொதுமக்கள் என அனைவரும் பெருமளவில் கலந்து கொண்டு இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தை மாபெரும் வெற்றி ஆர்ப்பாட்டமாக நடத்தித் தர வேண்டும் என்று தேமுதிக சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்தவர்கள் உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் உயிருக்குப் போராடி வருகின்றன

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in