மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் டிஜிபி பணியிட மாற்றம்: அருணுக்கு கூடுதல் பொறுப்பு

மகேஷ்குமார் அகர்வால், அருண்
மகேஷ்குமார் அகர்வால், அருண்
Updated on
1 min read

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய விவகாரம் தொடர்பாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயஉயிரிழப்பு விவகாரம் எதிரொலியாக கள்ளச் சாராய உற்பத்தி, விற்பனை மற்றும் போதைப் பொருட்களை தடுக்கும் - கண்காணிக்கும் பிரிவான குற்றம் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல்டிஜிபி மகேஷ்குமார் அகர்வால்பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் வகித்து வந்த பொறுப்பை தமிழக காவல்துறை சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் கூடுதலாக கவனிப்பார்.

இதேபோல், சென்னை கீழ்ப்பாக்கம் காவல் மாவட்ட துணை ஆணையர் ஜி.கோபி, சென்னை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்பியாக இருந்த எஸ்.ஆர்.செந்தில்குமாருக்கு பதில் நியமிக்கப்பட் டுள்ளார். மகேஷ்குமார் அகர்வால் மற்றும் செந்தில்குமார் இருவரும் டிஜிபி அலுவலகத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உள்துறை செயலர் பி.அமுதா நேற்று பிறப்பித்தார்.

ஏற்கெனவே இவ்விவகாரம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டார். மாவட்ட எஸ்.பி.பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள் ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in