கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவம்: சேலம் அரசு மருத்துவமனையில் 5 பேர் உயிரிழப்பு

மாதிரிப் படம்
மாதிரிப் படம்
Updated on
1 min read

சேலம்: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்வபத்தில் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 5 பேர் இன்று (வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளனர். அதோடு 23 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் 60-க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் குடித்தனர். அவர்களில் பல பேருக்கு வாந்தி, மயக்கம், தலைவலி மற்றும் வயிறு எரிச்சலால் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, உள்ளிட்ட இடங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் , சேலம் அரசு மருத்துவமனையில் 31 பேர் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நாராயணசாமி (65) , சுப்பிரமணி (60) , ராமு (50) 3 பேர் நேற்று உயிரிழந்தனர். தொடர்ந்து மற்றவர்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) ஆனந்தன், ரவி, விஜயன், மனோஜ் குமார் ,மற்றொரு ஆனந்தன் ஆகிய 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

மேலும் ,வீரமுத்து (33 ), சிவா (32), அருள்( 38), கிருஷ்ணமூர்த்தி (55), வீரமுத்து(60) , பெரியசாமி (65), சந்திரசேகர் (27 ),செல்வராஜ் (57), கலியன் (64), முத்து (55), கணேசன்( 59 ),சுரேஷ் (42 ),சங்கர் (38) உள்பட 23 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in