Published : 19 Jun 2024 05:35 AM
Last Updated : 19 Jun 2024 05:35 AM
குன்னூர்: சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாய அமர்வு குன்னூரில் நேற்று டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி புருசைந்திர குமார்கவுரவ் தலைமையில் நடைபெற்றது.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கங்களின் தடையை நீடிப்பது அல்லது நீக்குவது தொடர்பாக, சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகள் தடுப்புத் தீர்ப்பாய அமர்வு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்.
1997-ல் தொடங்கப்பட்ட சிமி (இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம்) என்ற அமைப்புக்கு மத்திய அரசு 2001-ல் தடை தடை விதித்தது. தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டு, 2019-ல் ஐந்தாண்டு தடை நீட்டிப்பு வழங்கப்பட்டது.
இந்த தடை உத்தரவு நேற்றுடன் (ஜூன் 18) முடிவுக்கு வந்ததால், செல்லி உயர்நீதிமன்ற நீதிபதி புருசைந்திரகுமார் கெளரவ் தலைமையிலான தீர்ப்பாயம், இது தொடர்பான விசாரணையை நடத்தி வருகிறது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடைபெறும் தீர்ப்பாய விசாரணைக்காக, குன்னூர் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கு, நீதிமன்ற வளாகமாக மாற்றப்பட்டுள்ளது. டெல்லிஉயர் நீதிமன்ற நீதிபதி புருசைந்திரகுமார் கெளரவ் தலைமையிலான 15 பேர் குழுவினர் குன்னூருக்கு வந்தனர். நீதிபதிக்கு தமிழக காவல் துறை சார்பில் வரவேற்பு மரியாதை அளிக்கப்பட்டது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் விசாரணையில் கலந்து கொண்டனர். நேற்று தொடங்கியவிசாரணை, இன்று நிறைவடைகிறது. இதுகுறித்து நீதிமன்றப் பதிவாளர் ஜித்தேந்திர பிரதாப் சிங் கூறும்போது, சிமி இயக்கத்தை தொடர்ந்து தடை செய்வது குறித்தவழக்கு விசாரணை தற்போது நடைபெற்ற வருகிறது. குன்னூரில் இன்று நடைபெற்ற விசாரணையில், தமிழக அரசின் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT