Published : 31 May 2018 01:33 PM
Last Updated : 31 May 2018 01:33 PM

மெரினா கடற்கரையில் வெளிநாட்டு பெண்ணிடம் வழிப்பறி

மெரினா கடற்கரையில் ஆஸ்திரேலிய நாட்டு இளம்பெண்ணிடம் பையை பறித்துச்சென்ற வழிப்பறி நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஆஸ்திரேலியவைச் சேர்ந்த இளம்பெண் எலிசா வெண்டர்சன்(23). இந்தியாவை சுற்றிப்பார்க்க வந்த அவர் சென்னைக்கு வந்தார். நேற்று மாலை சென்னையில் தனது தோழிகளுடன் புகழ்பெற்ற மெரினா கடற்கரையை காண சென்றார்.

கடலில் இறங்கி கால் நனைத்த பிறகு கடற்கரை மணலில் அமர்ந்து தனது தோழிகளுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, மர்ம நபர் ஒருவர் அவரிடம் வந்து பேச்சுக்கொடுத்துள்ளார். பின்னர் திடீரென அவரது பையை பறித்துக் கொண்டு அந்த நபர் ஓடியுள்ளார். திருடன் திருடன் என்று கூச்சலிட்டார்.

ஆனால் அருகிலிருந்த யாரும் அவரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. இதனால் அந்த நபர் எளிதாக தப்பித்து ஓடிவிட்டார். இதை அடுத்து தனது பையை வழிப்பறி செய்தது சம்பந்தமாக மெரினா காவல் நிலையத்தில் எலிசா வெண்டர்சன் புகார் அளித்தார்.

அவரது புகாரில் தனது பையில் விசா, பாஸ்போர்ட், 2 செல்போன்கள், 15 ஆயிரம் ரொக்கம், விலையுயர்ந்த கேமரா மற்றும் ஆடைகள் இருந்ததாக தெரிவித்துள்ளார். எலிசா வெண்டர்சன் புகாரின் அடிப்படையில் மெரினா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து மனிதனை கடித்த கதையாக வயதானவர்கள், தனியே செல்லும் பெண்கள், அதிகாலையில் கோலம் போடும் பெண்கள் என பயந்து பயந்து வழிப்பறி செய்துவந்தவர்கள் தற்போது துணிந்து பலர் முன்னிலையில் கடற்கரையில் வெளிநாட்டு பெண்ணிடம் வழிப்பறி அளவிற்கு வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x