

கடலூர் கெடிலம் ஆற்றில் கம்மியம் பேட்டை முதல் அண்ணா பாலம் வரை முள் செடிகள் படர்ந்துள்ளது. இதனால் மழைக்காலங்களில் வெள்ளநீர் விரைந்து வடிய இயலாமல் கரை பகுதிகளில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் புகும் அபாயம் இருந்தது. இதனால் 3 கி.மீ நீளம், 300 மீ அகலத்துக்கு கெடிலம் ஆற்றுப்படுகையில் உள்ள முள் செடிகளை அகற்றும் பணியை கடலூர் நீர்வள ஆதாரத்துறையினர் சனிக்கிழமை தொடங்கினர்.
இப்பணிகளை மாநிலப் பத்திரப் பதிவு மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கடலூர் ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார், எம்பி அருண்மொழித்தேவன், நகர்மன் றத் தலைவர் சி.கே.சுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு வந்த கடலூர் நகர அம்மா பேரவை பொருளாளரும், கடலூர் நகர்மன்றத் தலைவரின் மகனுமான சண்முகம் அமைச்ச ருடன் கடும் வாக்குவாதம் செய்தார். கெடிலம் ஆற்றில் அண்ணாபாலம் அருகே ஹோட்டல் கடைக்காரர் கள் கழிவுகளை கொட்டுகின்றனர். அதை தடுக்க முதலில் நடவடிக்கை எடுங்கள். முள்செடிகளை அகற்று வது தொடர்பாக 5 மாதங்க ளுக்கு முன்னரே தீர்மானம் நிறை வேற்றப்பட்டது, நகராட்சியினர் அப்பணிகளை செய்யவிடாமல் 5 மாதங்களாக தடுக்கும் பணியில் ஈடுபட்டனர். தற்போது பத்திரிகைகளுக்கு போஸ் கொடுப்பதற்காக இப்பணிகளை செய்கின்றனர். கடலூர் நகர வளர்ச்சிக்கு முதல்வர் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். அந்த பணிகளை முதலில் மேற்கொள்ளுங்கள் என சண்முகம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த அமைச்சரின் ஆதரவாளர்கள் சண்முகத்தை தாக்க முயற்சித் தனர். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் ஒருமையில் பேச, இருவருக்கும் இடையே வாக்கு வாதம் அதிகமானது. பின்னர் அருகி லிருந்தவர்கள் இருவரையும் சமா தானம் செய்து அனுப்பிவைத்தனர். பிரச்சினை எழுந்ததைத் தொடர்ந்து கடலூர் எம்பி அருண்மொழித்தேவன் மற்றும் நகர் மன்றத் தலைவர் சி.கே.சுப்ரமணியன் ஆகியோர் சம்பவ இடத்தை விட்டு வெளியேறினர்.
இது தொடர்பாக அமைச்சர் ‘எம்.சி.சம்பத்திடம் கேட்டபோது, இது ஒரு பிரச்சினையே அல்ல. அவர் விஷயம் தெரியாமல் பேசுகிறார். கடலூர் நகர் மக்களின் நலன்கருதி செய்யும் பணிகளில் சில இடையூறுகள் ஏற்படும். அதை நாங்கள் பொருட்படுத்துவதில்லை’ என்றார்.
அம்மா பேரவை பொருளாளர் சண்முகத்திடம் கேட்டபோது, ‘தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் பல்வேறு நகரங்கள் வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக் கிறது. கடலூருக்கு சிறப்பு நிதி ஒதுக்கியும், அவை ஒரு சில காரணங்களைக் காட்டி முடக்கும் முயற்சியில் அமைச்சர் ஈடுபடுவது வேதனையளிக்கிறது’ என்றார்.
கெடிலம் ஆற்றில் அண்ணாபாலம் அருகே ஹோட்டல் கடைக்காரர்கள் கழிவுகளை கொட்டுகின்றனர்.