விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: கொமதேக தேர்தல் பணிக்குழு அறிவிப்பு

ஈஸ்வரன் | கோப்புப்படம்
ஈஸ்வரன் | கோப்புப்படம்
Updated on
1 min read

நாமக்கல்: விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பணியாற்ற, கொமததேகவின் நாமக்கல் எம்பி., தலைமையில் தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு கொமதேக ஆதரவளித்துள்ளது. இதையொட்டி அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தேர்தல் களத்தில் கடுமையாக பணியாற்றும்.

இதற்காக, நாமக்கல் கொமதேக எம்பி மாதேஸ்வரன் தலைமையில் தேர்தல் பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. பணிக்குழு உறுப்பினர்களாக கொமதேக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் வேலு, சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் ரமேஷ், சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர் லோகநாதன், சென்னை மாவட்டச் செயலாளர் இசை பாலு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.மாநிலம் முழுவதும் உள்ள கொமதேக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றுவர்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in