Published : 24 Aug 2014 10:30 AM
Last Updated : 24 Aug 2014 10:30 AM

வாக்கிங் சென்ற கடலூர் நகராட்சி ஆணையர் மோட்டார் சைக்கிள் மோதி படுகாயம்: கொலை முயற்சி வழக்கு பதிவு

வாக்கிங் சென்றபோது கடலூர் நகராட்சி ஆணையர் காளிமுத்து மீது பைக் மோதியது. இதில் ஆணையரின் கை மற்றும் கால் எலும்பு முறிந்தது. விபத்து குறித்து விசாரணை நடத்த மாவட்ட எஸ்பி ராதிகா தனிப்படை அமைத்துள்ளார்.

கடலூர் நகராட்சி ஆணையராக இருந்து வருபவர் காளிமுத்து(50). இவர் கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள நகராட்சி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். காளிமுத்து வழக்கம் போல் சனிக்கிழமை காலை வாக்கிங் சென்றார்.

சீத்தாராமன் நகர் வழியாக சென்று கொண்டிருந்தபோது பைக் ஒன்று காளிமுத்து மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. பைக்கில் 3 பேர் இருந்துள்ளனர். பைக் மோதியதில் காயமடைந்த காளிமுத்து மயங்கி விழுந்தார். அவ்வழியே சென்றவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவரை பரிசோதித்த டாக் டர்கள், இடது கை மற்றும் கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். காளிமுத்துவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப் பட்டது.

விபத்து குறித்து தகவ லறிந்த கடலூர் எஸ்பி ராதிகா மற்றும் கோட்டாட்சியர் ஷர்மிளா ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று காளிமுத்துவை சந்தித்து நலம் விசாரித்தனர்.

அப்போது ஆணையர் காளிமுத்து, அடையாளம் தெரி யாத 3 நபர்கள் பைக்கில் வந்து தன் மீது மோதி விபத்து ஏற்படுத்தி கொலை செய்ய முயற்சித்த தாக புகார் தெரிவித்தார். இது தொடர்பாக கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளிக் கப்பட்டது. இதையடுத்து டிஎஸ்பி ராமமூர்த்தி தலைமையில் விபத்து குறித்து விசாரணை நடத்த தனிப் படை அமைத்து எஸ்பி ராதிகா உத்தரவிட்டார்.

நகராட்சி ஆணையர் விபத்துக் குள்ளான தகவலறிந்த கவுன் சிலர்கள், நகராட்சி ஊழியர்கள் அனைவரும் ஒன்றுகூடி இது விபத்து அல்ல எனவும், ஆணையரைக் கொல்லும் முயற்சியில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி மஞ்சக்குப்பம் தலைமை தபால் அலுவலகம் அருகே சாலைமறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கடலூர் புதுநகர் போலீஸார் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதனிடையே நகராட்சி அலுவலக ஊழியர்கள் பணியை புறக்கணித்து அலுவலக வாயி லிலேயே அமர்ந்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x