கீழடியில் 10-ம் கட்ட அகழாய்வு ஜூன் 18-ல் தொடக்கம்: காணொலி மூலம் முதல்வர் தொடங்கி வைக்கிறார்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

திருப்புவனம்: கீழடியில் 10-ம் கட்ட அகழாய்வுப்பணியை வரும் 18-ம் தேதிகாணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள கீழடியில் 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்ட நகர நாகரிகம் இருந்தது கண்டறியப்பட்டது. அங்கு இதுவரை 9 கட்ட அகழாய்வுப் பணிகள் நடத்தப்பட்டுள்ளன. அதேபோல, அருகில் உள்ள கொந்தகை, அகரம்,மணலூர் உள்ளிட்ட இடங்களிலும் அகழாய்வுகள் நடைபெற்றன.

இங்கு பல்லாயிரக்கணக்கான தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன. இந்த தொல்பொருட்களை பொதுமக்கள் பார்வையிடும் வகையில், உலகத் தரம் வாய்ந்த கீழடிஅகழ் வைப்பகம் அமைக்கப்பட்டது. இதை தினமும் ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கீழடியில் 10-ம்கட்ட அகழாய்வு மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டு, கீழடிஉள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள ரூ.5 கோடியைஅரசு ஒதுக்கியது. அப்போது மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால், கீழடியில் அகழாய்வு பணியை தொடங்கவில்லை.

தற்போது தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், கீழடியில் 10-ம் கட்ட அகழாய்வுப் பணியை வரும் 18-ம்தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாகத் தொடங்கிவைக்கிறார்.

இதற்கான ஏற்பாடுகளை தொல்லியல் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in