இனிமேல்தான் ஆட்டம் இருக்கிறது: அன்பில் மகேஸ் கருத்து @ நீட் தேர்வு விவகாரம்

இனிமேல்தான் ஆட்டம் இருக்கிறது: அன்பில் மகேஸ் கருத்து @ நீட் தேர்வு விவகாரம்
Updated on
1 min read

திருச்சி: தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ்பொய்யாமொழி திருச்சியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

தமிழகத்தில் ஏற்கெனவே 20 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 17 ஆயிரம் பள்ளிகளிலும் இம்மாத இறுதிக்குள் ஸ்மார்ட் வகுப்பறை வசதி ஏற்படுத்தப்படும். கல்வித் துறையில் தமிழகம் போட்டி போடுவது பிற மாநிலங்களோடு அல்ல, பிற நாடுகளுடன்.

நீட் தேர்வு ஏழை மாணவர்களை பழிவாங்க கூடிய ஒன்றாகஇருக்கிறது என்று ஆரம்பத்தில் இருந்தே கூறிவருகிறோம். நீட்தேர்வில் குளறுபடிகள் நடந்துள்ளதால், இந்த தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் என்று மகாராஷ்டிரா ஷிண்டே அரசு வலியுறுத்தி உள்ளது. நீட் தேர்வைப் பொறுத்தவரை இனிமேல் தான் ஆட்டம் இருக்கிறது. இந்த முறை நீட் தேர்வை ஒழிப்பதற்கு எல்லா வகையிலும் கடுமையாகப் போராடுவோம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in