Published : 08 Jun 2024 05:50 AM
Last Updated : 08 Jun 2024 05:50 AM
சென்னை: ரூ.930 கோடி மோசடியில் ஈடுபட்டதாக பாசி நிதி நிறுவனத்துக்கு எதிராக பதியப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி பிரமோத்குமாரை விடுவித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்களிடம் இருந்து ரூ.930கோடி முதலீடுகளை பெற்று மோசடிசெய்ததாக திருப்பூர் பாசி நிதி நிறுவனத்துக்கு எதிராக போலீஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்தவழக்கில் தொடர்புடைய நிதி நிறுவன இயக்குநரான கமலவள்ளி, திடீரென மாயமானார். பின்னர் சிலநாட்களில் திரும்பி வந்த கமலவள்ளி, மோசடி வழக்கில் இருந்து விடுவிப்பதாக கூறி தன்னிடம் ரூ.3 கோடி வரை லஞ்சம் பெற்றதாக ஆனைமலை காவல் நிலைய அப்போதைய ஆய்வாளர் மோகன்ராஜ், திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு அப்போதைய ஆய்வாளர் சண்முகையா ஆகியோருக்கு எதிராக புகார் தெரிவித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், அப்போது மேற்கு மண்டல ஐஜியாக இருந்த ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார் மற்றும் போலீஸாருக்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர், உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிபிஐக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கில், கோவையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய் யப்பட்டது.
இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி பிரமோத்குமார் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்த கோவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம், அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரமோத் குமார் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விவேக்குமார் சிங், ‘‘மனுதாரர் லஞ்சம் பெற்றார் என்பதை தகுந்த ஆவணங்களுடன் நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டது. அவர் சார்பாக மற்றவர்கள் வாங்கினார்கள் என குற்றம் சாட்டியிருப்பது வெறும் ஊகத்தின் அடிப்படையிலானது. எனவே, இந்த வழக்கில் இருந்துஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமாரை விடுவிக்க மறுத்தும், குற்றச்சாட்டுகளை பதிவு செய்தும் கோவை சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படு கிறது’’ என கூறி வழக்கில் இருந்து ஐபிஎஸ் அதிகாரி பிரமோத்குமாரையும் விடுவித்து உத்தர விட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT