அரசு உதவி பெறும் பள்ளிகளில் நூலகர் பணியிடம் நீக்கம்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

அரசு உதவி பெறும் பள்ளிகளில் நூலகர் பணியிடம் நீக்கம்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
Updated on
1 min read

மதுரை: தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நூலகர் பணியிடங்கள் நீக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சிவகங்கை புனித மரியன்னை பெண்கள் மேல்நிலை பள்ளியில் நூலகர் பணியிடத்தை நிரப்ப அனுமதி வழங்கக்கோரி பள்ளி தாளாளர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், பள்ளிக் கல்வித் துறை 2018-ல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நூலகர் பணியிடத்தை நீக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே, மனுதாரருக்கு நிவாரணம் வழங்க முடியாது எனக் கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் இனி நூலகம் இருக்காது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவா? அப்படி இருந்தால் அரசு பள்ளிகளை சார்ந்து இருக்கும் இளம் மாணவர்களின் அறிவாற்றல் பரவலாக்கம் உறுதி செய்யப்படுமா?

நூலகங்கள் தொடர்பான அரசின் இந்த முடிவு அவசியமா? அரசு பள்ளிகளில் நூலகங்கள் தேவை என்றால், அந்த நூலகங்களை நூலகரின் உதவியின்றி சிறப்பாக கையாள முடியுமா? அரசு பள்ளிகளில் நூலகர்கள் பணியமர்த்தப்படுவது அரசின் கொள்கை முடிவாக இருந்தால், இதே நடைமுறையை அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏன் பின்பற்றக்கூடாது? என கேள்வி எழுப்பினர்.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளர் மற்றும் இயக்குனர் ஆகியோர் ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும். விசாரணை ஜூன் 13க்கு ஒத்திவைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in