Published : 10 May 2018 09:49 AM
Last Updated : 10 May 2018 09:49 AM

ஜூன் 18-ல் பேரவை கூட்டம்?

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மார்ச் 15-ம் தேதி தொடங்கியது. அன்று 2018-19-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். மார்ச் 19 முதல் 22-ம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. விவாதத்துக்கு துணை முதல்வர் பதிலளித்தார். அதைத் தொடர்ந்து பேரவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தனியாக நடத்தப்பட உள்ளது. இதற்காக ஜூன் 3-வது வாரத்தில் அதாவது ஜூன் 18-ம் தேதி பேரவைக் கூட்டம் தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x