Published : 22 Aug 2014 12:00 AM
Last Updated : 22 Aug 2014 12:00 AM

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களை ஆராய்ச்சி மையங்களாக உருவாக்க வேண்டும்: துணை வேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ரோசய்யா பேச்சு

பல்கலைக்கழகங்களை ஆராய்ச்சி மையங்களாக உருவாக்க வேண்டும் என்று சென்னையில் நடந்த துணை வேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ரோசய்யா கூறினார்.

தமிழகத்தின் அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை தர்பார் அரங்கில் வியாழக்கிழமை நடந்தது. மாநாட்டுக்கு ஆளுநரும் பல்கலைக்கழகங்களின் வேந்த ருமான கே.ரோசய்யா தலைமை தாங்கி பேசியதாவது:

உயர்கல்வியின் தரத்தை சர்வதேச அளவுக்கு உயர்த்துவது குறித்து ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். லண்டன் டைம்ஸ் வெளியிட்ட உலகின் மிகச்சிறந்த 200 பல்கலைக்கழகங்களில், ஒரேயொரு இந்திய பல்கலைக்கழகம் மட்டுமே இடம்பெற்றி ருப்பது கவலை அளிக்கிறது.

பல்கலைக்கழகங்களும் கல் லூரிகளும் இளைஞர்களின் சக்தியை ஆராய்ச்சித் துறையில் உரிய முறையில் பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் இந்தியா அனைத்து துறைகளிலும் முன்னணியில் திகழும். தற்போது உயர்கல்வி செல்வோரின் எண்ணிக்கை 15முதல் 18 சதவீதம் வரை உள்ளது. இதை 30 சதவீத மாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடி கூறியதுபோல இந்தியாவின் உண்மையான அடையாளம் உலகத்துக்கு தெரிய வேண்டும்.மாணவர்களை திறமைமிக்க வர்களாகவும், தொழில் முனைவோர்களாகவும், ஆராய்ச்சியா ளர்களாகவும் உருவாக்க வேண்டியது பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தலையாய கடமையாக இருக்க வேண்டும்.

சர்வதேச தரத்தில் உயர்கல்வி

நமது கல்வி நிறுவனங்கள் சர்வதேச தரத்தை எட்ட வேண்டும் என்ற முதல்வர் ஜெயலலிதாவின் லட்சியக் கனவை நனவாக்க பல்கலைக்கழகங்கள் பாடுபட வேண்டும். வளர்ச்சிக்கும் ஆற்றலுக்கும் அடிப்படையாக இருப்பதுஅறிவுதான். பல்கலைக்கழகங் களை ஆராய்ச்சி மையங்களாக உருவாக்க வேண்டும். நமது மிகுதியான மனித வள மூலதனத்தை அறிவுசார் மூலதன மாக மாற்ற வேண்டும்.

இவ்வாறு ஆளுநர் ரோசய்யா பேசினார்.

மாநாட்டில் பல்கலைக்கழகங்களின் இணைவேந்தர்களான அமைச்சர்கள் பி.பழனியப்பன், கே.ஏ.ஜெயபால், எஸ்.பி.வேலு மணி, கே.சி.வீரமணி, எஸ்.சுந்தர்ராஜ், அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, டி.கே.எம்.சின்னையா, சி.விஜயபாஸ்கர் மற்றும் துணைவேந்தர்கள், அரசுஉயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x