திமுக வேட்பாளருக்கு இணையாக அண்ணாமலைக்கு அஞ்சல் வாக்குகள்

திமுக வேட்பாளருக்கு இணையாக அண்ணாமலைக்கு அஞ்சல் வாக்குகள்
Updated on
1 min read

கோவை: கோவை தொகுதியில் கணபதிப.ராஜ்குமார் (திமுக), அண்ணாமலை (பாஜக), சிங்கை ஜி.ராமச்சந்திரன் (அதிமுக) உட்பட 37 பேர் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில், திமுக வேட்பாளர் 5.68 லட்சம் வாக்குகள் பெற்று, 1.18 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் அண்ணாமலை 4,50,312 வாக்குகள் பெற்றார். எனினும், அஞ்சல் வாக்குகளில் திமுக வேட்பாளருக்கு ஈடாக, அண்ணாமலை வாக்குகள் பெற்றுள்ளார்.

மொத்தம் 7,132 அஞ்சல் வாக்குகள் பதிவான நிலையில், கணபதி ராஜ்குமார் 2,772, அண்ணாமலை 2,524, ராமச்சந்திரன் 887, நாதக வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் 270 அஞ்சல்வாக்குகளைப் பெற்றனர். திமுக வேட்பாளருக்கு இணையாக, அண்ணாமலைக்கு அஞ்சல் வாக்குகள் கிடைத்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in