Published : 06 Jun 2024 05:43 AM
Last Updated : 06 Jun 2024 05:43 AM
குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்தில் பயிற்சி முடித்த 3-வது குழுவில் 841 அக்னி வீரர்கள் சத்தியப் பிரமாணம் எடுத்து கொண்டனர்.
குன்னூர் அருகேயுள்ள வெலிங்டன் ராணுவ மையத்தில் இளைஞர்களுக்கு `அக்னி வீரர்' பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 31 வாரப்பயிற்சியை முடித்த 3-வது அணியில், 841 அக்னி வீரர்கள் சத்தியப் பிரமாணம் ஏற்கும் நிகழ்ச்சி பேரக்ஸ் நாகேஷ் சதுக்கத்தில் நேற்று நடைபெற் றது.
இதையொட்டி, ராணுவ பேண்ட் வாத்தியக் குழுவினர் தேசபக்தி பாடல்களை இசைக்க, தேசியக்கொடி, எம்.ஆர்.சி. (மெட்ராஸ் ரெஜிமென்டல் சென்டர்) கொடி கொண்டு வரப்பட்டது. உப்பு உட்கொண்டு, பகவத் கீதை, பைபிள், குரான் புத்தகங்கள், தேசியக்கொடி மீது ராணுவ வீரர்கள் சத்தியப் பிரமாணம் எடுத்துகொண்டனர்.
தொடர்ந்து, ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை எம்.ஆர்.சி. கமாண்டன்ட் பிரி கேடியர் சுனில்குமார் யாதவ் ஏற்றுக்கொண்டு, பயிற்சியில் சிறந்து விளங்கிய 6 வீரர்களுக்குப் பதக்கம் மற்றும் கேடயங்கள் வழங்கினார்.
பின்னர் அக்னி வீரர்கள் மத்தியில் அவர் பேசும்போது, ‘‘சத்தியப் பிரமாண நிகழ்ச்சி, ஒவ்வொரு ராணுவ வீரரின் வாழ்விலும் முக்கியமான, மறக்க முடியாத நிகழ்வாகும். நாட்டில் கோடிக்கணக்கான இளைஞர்களின் கனவாக உள்ள ராணுவச் சீருடை உங்களுக்கு கிடைத்துள்ளது பாராட்டுக்குரியது. தற்போது ராணுவ மையத்தில் பயிற்சி கடினமாக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் கடினமான சூழ்நிலைகளை எளிதாக எதிர்கொள்ள முடியும்’’ என்றார்.
தொடர்ந்து, அக்னி வீரர்கள் தங்களது பெற்றோர், உறவினர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT