Published : 06 Jun 2024 06:05 AM
Last Updated : 06 Jun 2024 06:05 AM
சென்னை: கழிவுநீர் பிரதான குழாய் இணைக்கும் பணியின்போது கழிவுநீர் வெளியேறும் நிலை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு நிலைமையை சரி செய்து கொள்ளலாம்.
இதுகுறித்து சென்னைக் குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மண்டலம்-8 (அண்ணா நகர்), அயனாவரம் கழிவுநீர் உந்து நிலையத்திலிருந்து பெரம்பூர் கழிவுநீர் உந்து நிலையத்துக்கு பிரதான உந்து குழாய் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்று (ஜூன் 6) காலை 11.00 மணிமுதல் மறுநாள் 7-ம் தேதி காலை 11.00 மணி வரை (ஒரு நாள் மட்டும்) அயனாவரம் கழிவுநீர் உந்து நிலையம் தற்காலிகமாக செயல்படாது.
எனவே, மண்டலம்-8 (அண்ணா நகர்) பகுதிக்கு உட்பட்ட அயனாவரம் பகுதிகளில் கழிவுநீர் நிரம்பி வெளியேறும் நிலை ஏற்பட்டால், அவசரத் தேவைகளுக்காக கழிவுநீர் உறிஞ்சும் இயந்திரங்கள் மூலம் கழிவுநீரை வெளியேற்ற பகுதிப் பொறியாளர் – 8 (அண்ணா நகர்) கைபேசி எண்.81449 30908, துணை பகுதிப் பொறியாளர் கைபேசி எண்.81449 30221, துணை பகுதிப் பொறியாளர் கைபேசி எண்.81449 30223 ஆகிய அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT