Published : 05 Jun 2024 08:34 AM
Last Updated : 05 Jun 2024 08:34 AM
சென்னை: மக்களவைத் தேர்தலில் 6 தொகுதிகளில் 3-ம் இடம் பிடித்து நாம் தமிழர் கட்சி கவனம் ஈர்த்துள்ளது. நடந்து முடிந்த 2024-ம் மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்து களம் இறங்கியது.
புதிதாக ஒதுக்கப்பட்ட மைக் சின்னத்தில் போட்டியிட்டது. இந்நிலையில் மக்களவை தேர்தல் முடிந்து நேற்று முடிவுகள் வெளியானது. இதில் நாம் தமிழர் கட்சி அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியிருந்தாலும் 6 தொகுதிகளில் 3-ம் இடத்தை பிடித்து கவனம் ஈர்த்துள்ளது.
அந்த வகையில் கன்னியாகுமரி - 52,677, கள்ளக்குறிச்சி - 73,652, நாகப்பட்டினம் - 1,31,294, ஈரோடு - 80,255, திருச்சி - 1,07,458, புதுச்சேரி - 38,938 வாக்குகள் பெற்று 3-ம் இடத்தை பிடித்துள்ளது. இதில் 2 இடங்களில் அதிமுகவையும், 2 இடங்களில் தமாகாவையும், தலா ஒரு இடங்களில் பாஜக, பாமக, அமமுக ஆகிய கட்சிகளையும் பின்னுக்கு தள்ளி 3-ம் இடத்தை பிடித்துள்ளது. மீதமுள்ள 33 மக்களவை தொகுதிகளிலும் 4-ம் இடத்தை பிடித்தது.
முன்னதாக திருச்சி மக்களவைத் தொகுதி தபால் வாக்கு எண்ணிக்கையில் கணிசமான வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT