Published : 04 Jun 2024 01:00 PM
Last Updated : 04 Jun 2024 01:00 PM

ஆ.ராசா 63,410 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை; எல்.முருகன் பின்னடைவு @ நீலகிரி

எல்.முருகன், ஆ.ராசா, லோகேஷ் தமிழ்செல்வன், ஆர்.ஜெயகுமார்

உதகை: நீலகிரி மக்களவைத் தொகுதியில் 6-வது சுற்று முடிவில் திமுகவின் ஆ.ராசா 1,39,307 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் ஆ.ராசா, பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், அதிமுக சார்பில் லோகேஷ் தமிழ்செல்வன், நாம் தமிழர் சார்பில் ஜெயக்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.நீலகிரி மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இதில், 3-ம் சுற்று முடிவில் திமுகவின் ஆ.ராசா 70,415 வாக்குகளும், பாஜகவின் எல். முருகன் 38,750 வாக்குகளும், அதிமுகவின் லோகேஷ் தமிழ்செல்வன் 29,932 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் ஜெயக்குமார் 7,818 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

இதுவே, 4-வது சுற்று முடிவில் திமுகவின் ஆ.ராசா 91,872 வாக்குகளும், பாஜகவின் எல்.முருகன் 51,160 வாக்குகளும், அதிமுகவின் லோகேஷ் தமிழ்செல்வன் 38,784 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் ஜெயக்குமார் 9,878 வாக்குகளும் பெற்றிருந்தனர்.5-வது சுற்று முடிவில் திமுகவின் ஆ.ராசா 1,16,302 வாக்குகளும், அதிமுகவின் லோகேஷ் தமிழ்செல்வன் 48,499 வாக்குகளும், பாஜகவின் எல்.முருகன் 63,438 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் ஜெயக்குமார் 12,413 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

தற்போது வெளியான 6-வது சுற்று முடிவின் படி, திமுகவின் ஆ.ராசா 1,39,307 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுகவின் லோகேஷ் தமிழ்செல்வன் 59,017 வாக்குகளும், பாஜகவின் எல்.முருகன் 75,897 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் ஜெயக்குமார் 15,237 வாக்குகளும் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் ஆ.ராசா 63,410 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x