Published : 04 Jun 2024 10:22 AM
Last Updated : 04 Jun 2024 10:22 AM

கோவையில் அண்ணாமலை பின்னடைவு: முதல் சுற்று முடிவில் திமுக முன்னிலை | தேர்தல் முடிவுகள் 2024

அண்ணாமலை | கோப்புப்படம்

கோவை: கோவை மக்களைவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையில் முதல் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.

மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது . கோவை மக்களவைத் தொகுதிக்கான எண்ணிக்கை தடாகம் சாலையில் உள்ள ஜிசிடிகல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. கோவை மக்களவைத் தொகுதியில் வேட்பாளர்களாக திமுக சார்பில் கணபதி ராஜ்குமார் , பாஜக சார்பில் அண்ணாமலை, அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன் , நாம் தமிழர் சார்பில் கலாமணி ஜெகநாதன் ஆகியோர் போட்டியிட்டனர்.

தொடர்ந்து முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் மொத்தம் 9371 வாக்குகள் பதிவாகியிருந்தன. அதில் திமுக வேட்பாளர் ராஜ்குமார் 5127,பாஜக வின் அண்ணாமலை 1852 வாக்குகள்,அதிமுகவின் ராமச்சந்திரன் 1541 வாக்குகள் பெற்றுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x