Published : 04 Jun 2024 07:11 AM
Last Updated : 04 Jun 2024 07:11 AM

காளையார்கோவில் அருகே டிவி வெடித்ததில் வீடு தீப்பற்றி எரிந்தது

மறவமங்கலத்தில் டிவி வெடித்து வீட்டில் பற்றிய தீயை அணைத்த தீயணைப்புத் துறையினர்.

சிவகங்கை: காளையார்கோவில் அருகே டிவி வெடித்ததில் வீடு முழுவதும் எரிந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே மறவமங்கலத்தைச் சேர்ந்த சுமைதூக்கும் தொழிலாளி ராமன் (65). இவர் குடும்பத்துடன் ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று பிற்பகல் ராமனின் பேத்திகள் அரசு வழங்கிய இலவச டிவியில் நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பலத்த சத்தத்துடன் டிவி வெடித்துச் சிதறியது.

இதையடுத்து சிறுமிகள் அலறியபடி வீட்டைவிட்டு வெளியே ஓடினர். இந்நிலையில் தீ மளமளவென வீடு முழுவதும் பரவியது. தகவல் அறிந்து வந்த இளையான்குடி தீயணைப்புத் துறையினர், கிராம மக்களின் உதவியோடு போராடி தீயை அணைத்தனர்.

அதற்குள் வீடு முற்றிலும் சேதமடைந்தது. மேலும் அங்கிருந்த 4 பவுன் நகைகள், பத்திரங்கள், ஆதார், ரேஷன் கார்டு போன்ற ஆவணங்கள், துணிகள், வீட்டு உபயோக பொருட்கள் என பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து காளையார்கோவில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x