

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வரும், திமுகவின் 50 ஆண்டுகால தலைவருமான மு.கருணாநிதியின், 101-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி இன்று, காலை9 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து, 9.15 மணிக்கு அண்ணாசாலை ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
அதன்பின், 9.30 மணிக்கு கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி வளாகத்தில் கருணாநிதி சிலைக்கும் காலை 10மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் உள்ள சிலைக்கும் மாலைஅணிவித்து மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து, கோபாலபுரம் மற்றும் சிஐடி நகர் இல்லங்களுக்கும் சென்று அங்கு மரியாதை செலுத்துகிறார். அவருடன் அமைச்சர்கள், நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர்.