ம.பி முதல்வர் மோகன் யாதவ் ராமேசுவரம் கோயிலில் சாமி தரிசனம்!

ராமேசுவரம் ராமநாதபுசுவாமி கோயிலில் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்த ம.பி. முதல்வர் மோகன் யாதவ். 
ராமேசுவரம் ராமநாதபுசுவாமி கோயிலில் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்த ம.பி. முதல்வர் மோகன் யாதவ். 
Updated on
1 min read

ராமநாதபுரம்: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ், குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தார்.

மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் குடும்பத்தினருடன் சனிக்கிழமி (ஜூன் 1) பிற்பகலில் மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் ஹெலிபேட் தளத்துக்கு வந்தார். அங்கு பாஜக நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து அவரை வரவேற்றனர்.

பின்னர் அங்கிருந்து காரில் சென்று புயலால் அழிந்த நகரமான தனுஷ்கோடி மற்றும் அரிச்சல் முனை கடற்கரை பகுதிகளை பார்வையிட்டார். அதனையடுத்து ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வருகை தந்தார். அவருக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது.

அதனையடுத்து குடும்பத்தினருடன் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளை குடும்பத்தினருடன் சேர்ந்து தரிசனம் செய்தார். பின்னர் மாலையில் மண்டபத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை புறப்பட்டுச் சென்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in