Published : 01 Jun 2024 06:10 AM
Last Updated : 01 Jun 2024 06:10 AM
சென்னை: பழங்குடியினர் நலப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு ஜூன் மாதம் 18-ம் தேதி இணைய வழியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் எஸ்.அண்ணாதுரை நேற்று வெளியிட்ட செய் திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இணையவழியில்... பழங்குடியினர் நல உண்டி உறைவிட மேல்நிலைப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், முது கலை பட்டதாரி ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர்கள், உடற்கல்வி இயக்குநர்கள், உடற் கல்வி ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் நடுநிலைப் பள்ளி, ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 2024-25-ம் ஆண்டுக்கான இணையவழி பொது இடமாறுதல் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
அந்தந்த மாவட்ட பழங் குடியினர் நலத்திட்ட அலுவலர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினர் நல அலுவலர் அலுவ லகத்தில் ஜூன் மாதம் 18-ம்தேதி காலை 10 மணிக்கு கலந்தாய்வு நடைபெறும்.
பணியிட மாறுதல் கோரிஇணையவழியில் விண்ணப் பித்த ஆசிரியர்கள் மட்டும் இக்கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள். இவ்வாறு பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் எஸ்.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT