

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (மே 30) வருகை தர உள்ளார்.
திருமயத்தில் உள்ள கோட்டை பைரவர் மற்றும் சத்தியகிரீஸ்வரர் கோயிலில்வழிபடுவதற்காக அமித் ஷா இன்றுவருகிறார். இதற்காக வாராணசியில் இருந்து விமானம் மூலம்இன்று பிற்பகல் 3 மணிக்கு திருச்சிவிமான நிலையம் வரும் அவர்,அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் செல்கிறார்.
பின்னர் அங்கிருந்து காரில் வரும் அவர், திருமயம் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளார். தொடர்ந்து, அதேவழியாக மீண்டும் புறப்பட்டுச் செல்கிறார்.
அவரது வருகையை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டகாவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே தலைமையில், ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.
தேர்தல் பிரச்சாரத்தையொட்டி கடந்த மாதம் இந்தக் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய இருந்த நிலையில், மழை காரணமாக அமித் ஷா வருகை ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.