நீலகிரி: கிணற்றுக்குள் விழுந்த குட்டி யானையை மீட்க 4 மணி நேரமாக போராட்டம்

நீலகிரி: கிணற்றுக்குள் விழுந்த குட்டி யானையை மீட்க 4 மணி நேரமாக போராட்டம்
Updated on
1 min read

பந்தலூர்: நீலகிரி மாவட்டம் கொளப்பள்ளியில் கிணற்றுக்குள் விழுந்த குட்டி யானையை மீட்க 4 மணி நேரமாக வனத்துறையினர் போராடி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் குறிஞ்சி நகர் பகுதியில் நேற்று நள்ளிரவில் யானை கூட்டத்திலிருந்த குட்டி யானை ஒன்று தவறி கிணற்றுக்குள் விழுந்தது. தகவல் அறிந்த வனத்துறையினர் இன்று காலை 8 மணி அளவில் சம்பவ இடத்தை பார்வையிட்டு கிணற்றுக்குள் இருக்கும் குட்டி யானையை மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

3 மணி நேரத்துக்கும் மேலாக ஒரு பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் குட்டி யானையை மீட்கும் முயற்சிகள் நடைபெற்று வந்தன. அது முடியாமல் போனதால் இரண்டாவதாக இன்னொரு பொக்லைன் எந்திரமும் வரவழைக்கப்பட்டு தற்போது கிணற்றைச் சுற்றி மண்ணை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

கிணற்றுக்குள் சிக்கியுள்ள குட்டி யானை வெளியில் வர வழிதெரியாமல் தத்தளித்து வரும் நிலையில், ஆக்ரோஷம் அடைந்த தாய் யானை குட்டி யானையைத் தேடி கிணற்றின் அருகே வந்துவிடாமல் இருக்க வனத்துறையினர் தாய் யானை உள்ளிட்ட மற்ற யானைகளை தனிக் குழுவாக நின்று கண்காணித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in