பிறவியிலேயே முகத் தாடை குறைபாடுள்ள குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை: ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை - அகில பாரத மகிளா சேவா சமாஜ் ஒப்பந்தம்

பிறவியிலேயே முகத் தாடை குறைபாடுள்ள குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை: ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை - அகில பாரத மகிளா சேவா சமாஜ் ஒப்பந்தம்
Updated on
1 min read

சென்னை: பிறவியிலேயே உதடு அண்ணப்பிளவு, முகத் தாடை குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க அகில பாரத மகிளா சேவா சமாஜத்துடன் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை ஒப்பந்தம் செய்துள்ளது.

இதுகுறித்து போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டசெய்திக் குறிப்பு: பிறவியிலேயே உதடு அண்ணப்பிளவு மற்றும் பிற முகதாடை குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு அறுவை உள்ளிட்ட சிகிச்சைகளை இலவசமாக வழங்க சென்னை போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், அகில பாரத மகிளா சேவா சமாஜத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, மறு சீரமைப்பு அறுவை சிகிச்சைகள், பல் வரிசை சீரமைப்பு பல் சொத்தை தடுப்பு, பேச்சு மற்றும்காது மூக்கு தொண்டை பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படும்.

இந்தாண்டு, 50 உதடு அண்ணப்பிளவு மற்றும் முகத் தாடை அறுவைசிகிச்சைகள் உள்ளிட்ட பிற சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளன. இதற்கான உத்தேச செலவான, ரூ.16.50 லட்சம் அகில பாரத மகிளா சேவா சமாஜம் உதவித் தொகையாக வுழங்குகிறது. இந்தியாவில் பிறக்கும், 700 குழந்தைகளில், ஒருவருக்கு உதடு அண்ணப்பிளவு பிரச்சினை காணப்படுகிறது.

இளம் வயதிலேயே, இதற்கு அறுவை சிகிச்சைசெய்யாவிட்டால், குழந்தை வளரும்போது பேசுவதில் குறைபாடுஏற்படும். பிற குழந்தைகளைப் போல் பள்ளியில் சேர்ந்து படிக்கமுடியாமல் போகும் சூழல் உள்ளது. எனவே, மருத்துவமனையின் வாய் மற்றும் முகத் தாடை சீரமைப்பு மருத்துவத் துறை தலைவர் நவீன் குமார் தலைமையில் இலவச சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in