

கடந்த ஜூன், ஜூலை மாதம் நடைபெற்ற பிளஸ்-2 சிறப்பு துணைத் தேர்வு முடிவுகளைத் தொடர்ந்து, விண்ணப்பித்தவர்களுக்கான விடைத்தாள்கள் மறுமதிப்பீடு, மறுகூட்டல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்களின் பதிவெண்கள் பட்டியல் student.hse14rtrv.in என்ற இணைய தளத்தில், இன்று (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு வெளியிடப்படும்.
இந்த பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை. மதிப்பெண்களில் மாற்றம் உள்ளவர்கள், இன்று காலை 11 மணி முதல் அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவல கங்களில், பழைய மதிப்பெண் சான்றிதழை ஒப்படைத்துவிட்டு, புதிய மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் கு.தேவராஜன் தெரிவித்துள்ளார்